spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்"பெரியார் சிலை குறித்த கருத்து...” ஹெச்.ராஜாவுக்கு சிறை தண்டனை- நிறுத்திவைத்த நீதிபதி

“பெரியார் சிலை குறித்த கருத்து…” ஹெச்.ராஜாவுக்கு சிறை தண்டனை- நிறுத்திவைத்த நீதிபதி

-

- Advertisement -

பெரியார் சிலை உடைப்பு கருத்து மற்றும் திமுக எம்.பி. கனிமொழி குறித்து  சமூக ஊடகங்களில் விமர்சனம் செய்ததாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிராக தொடரப்பட்ட இரண்டு வழக்குகளில் அவர் குற்றவாளி என சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹெச்.ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்திருந்ததாகவும், 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் திமுக எம்.பி. கனிமொழியை தரக்குறைவாக விமர்சித்து எக்ஸ் தளத்தில் கருத்துக்களைப் பதிவிட்டிருந்ததாகவும், ஈரோடு நகர காவல்துறை, மற்றும் கருங்கல்பாளையம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

we-r-hiring

இந்த வழக்குகளை, சென்னையில் உள்ள எம்.பி. – எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜெயவேல் விசாரித்து வந்துள்ளார். இந்த விசாரணையின்போது, பெரியார் சிலையை தான் உடைப்பேன் என்று பேசியதற்கு ஆதாரங்கள் இல்லை எனவும், திமுக எம்.பி. கனிமொழி குறித்த கருத்து அரசியல் ரீதியானது எனவும், ஹெச். ராஜா தரப்பில் வாதிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து திமுக எம்.பி. கனிமொழி புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி எச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க வேண்டும் என சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதிடப்பட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில், காவல்துறை தரப்பில் குற்றச்சாட்டு நிரூபிக்க பட்டுள்ளது. இரண்டு பதிவுகளும் ஹெச். ராஜாவின் சமூக வலைதள பக்கத்தில் இருந்து அனுப்பபட்டது என்பதை இந்த நீதிமன்றம் தீர்மானித்து, ஹெச்.ராஜா குற்றவாளி என இந்த நீதிமன்றம் தீர்மானிக்கிறது. அவருக்கு, இந்த இரண்டு வழக்குகளிலும் எச்.ராஜாவுக்கு, இரண்டு வழக்கிலும் தனித்தனியாக 6 மாதம்  சிறை தண்டனையும், இரு வழக்கிலும் சேர்த்து 5000 ரூபாய் அபராதமும் விதித்து  நீதிபதி ஜி.ஜெயவேல் தீர்ப்பளித்தார்.

இதற்கிடையில் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்யவுள்ளதாகவும் தண்டனை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும் எச்.ராஜா தரப்பு முறையீடு செய்துள்ளது. அந்த முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதி மேல்முறையீடு செய்ய  30 நாட்களுக்கு தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டார்.

அமமுகவில் இருந்தால் அவமானம்… டி.டி.வி.தினகரனின் செல்வாக்கை உடைக்கும் நிர்வாகிகள்

MUST READ