spot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைவருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும்...

வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் – பிரேமலதா பேட்டி

-

- Advertisement -

வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி  200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய்காந்த் பேட்டியளித்துள்ளாா்.வருகின்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 200 + தொகுதிகளில் மகத்தான வெற்றி பெறும் – பிரேமலதா பேட்டிசென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து, 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைவர் தமிழக முதல்வரை தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா அண்ணா அறிவாலயத்தில் சந்தித்தார். தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்து திமுக கூட்டணியில்  இணைந்தார்.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தேமுதிக யாருடன் கூட்டணி என்ற கேள்வி பலர் கேட்டார்கள் அதற்கான விடை தற்போது திமுகவுடன் இன்று திமுக கூட்டணியில் உறுதி செய்துள்ளோம். தொண்டர்கள், மாவட்ட தலைவர்கள் என அனைவரிடம் கேட்டபோது திமுகவுடன் கூட்டணி வேண்டும் என அனைவருமே தெரிவித்தார்கள். அவர்கள் விருப்படி திமுகவுடன் கூட்டணி உடன் உறுதியாகி உள்ளது. எந்த இடம் எத்தனை இடம் என்பதெல்லாம் குழு அமைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்வோம். திமுக தலைவரும், தமிழக முதலமைச்சரும் தெரிவிப்பார், 2016-ல் திமுக கூட்டணியில் வந்திருக்க வேண்டியது, 10 வருடங்களுக்கு பிறகு அமைந்துள்ளது. இது வெற்றி கூட்டணியாக உள்ளது. இந்த கூட்டணி 200 பிளஸ்  வெற்றி பெறும், திமுகவுடனான கூட்டணி இறுதி செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என பேட்டியளித்துள்ளாா்.

NDA கூட்டணிக்கு பேரிடி – திமுக – தேமுதிக கூட்டணி உறுதியானது

we-r-hiring

MUST READ