நம் மீது பாகிஸ்தான் ஏற்படுத்தும் அனைத்து தாக்குதலுக்கும் தக்க பதிலடி கொடுத்துள்ளோம் என்று தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.கன்னியாகுமரியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை சென்னையிலிருந்து விமானம் மூலம் இன்று காலை தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வந்துள்ளாா். அப்போது செய்தியாளா்கள் சந்திப்பில் பேசியிருப்பதாவது, “இந்தியா – பாகிஸ்தான் பிரச்சனை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்தியாவைப் பொறுத்த வரையில் அறத்தின் அடிப்படையில் இருக்கின்றோம். பாகிஸ்தான் நம் மீது தொடுக்கும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து வருகின்றோம். பாகிஸ்தானுடன் சண்டையிடுவதால் நமக்கு பொருளாதார இழப்பு ஏற்பட போவதில்லை. தீவிரவாத தாக்குதலை வேரோடு அறுத்து எரிய வேண்டும். அதற்காகத்தான் இந்த போர் நடத்திக் கொண்டிருக்கின்றோம். பாகிஸ்தானை எதிர்ப்பதில் அனைவரும் ஒன்றாக இருக்கின்றார்கள். திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஆதரவளிக்கிறார்கள். மேலும், ராணுவத்திற்கு ஆதரவாக திமுக பேரணி நடத்துவது வரவேற்கத்தக்கது” என்று கூறியுள்ளார்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே பேச்சு வார்த்தையை நடத்த உதவுவதாக அமெரிக்க வலியுறுத்தல்!