spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஅம்பத்தூர் சூரப்பட்டு அருகே மெட்ரோ குடிநீர் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம்

அம்பத்தூர் சூரப்பட்டு அருகே மெட்ரோ குடிநீர் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம்

-

- Advertisement -
kadalkanni

அம்பத்தூர் சூரப்பட்டு அருகே மெட்ரோ குடிநீர் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம்

சென்னை அம்பத்தூர் சூரப்பட்டு அருகே மெட்ரோ குடிநீர் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது.

செங்குன்றத்திலிருந்து அம்பத்தூர் செல்லும் பிரதான சாலை மூடப்பட்டு ஒரு வழிபாதையாக மாற்றப்பட்ட நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிரும் புதிரும் செல்லும் வாகனங்களால் விபத்து ஏற்படும் அபாயம்.

நல்ல வாழ்க்கை துணையை தேடுகிறேன்… நடிகை மம்தா மோகன்தாஸ் பேட்டி…

 

 

சென்னைக்கு குடிநீர் வழங்கக்கூடிய முக்கிய நீர் ஆதாரமான புழல் ஏரியும் அம்பத்தூர் சூரப்பட்டு அருகே செயல்பட்டு வரக்கூடிய சென்னை மெட்ரோ குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் ராட்சத குடிநீர் விநியோகம் செய்யும் குழாயில் உயர் அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டு பெரிய அளவில் சாலையில் பள்ளம் விழுந்துள்ளது.செங்குன்றத்திலிருந்து அம்பத்தூர் செல்லக்கூடிய பிரதான சாலையில் பெரிய பள்ளம் விழுந்துள்ளது.

அம்பத்தூர் சூரப்பட்டு அருகே மெட்ரோ குடிநீர் ராட்சத குழாயில் வெடிப்பு ஏற்பட்டு சாலையில் ராட்சத பள்ளம்

தற்போது பள்ளத்தை சரி செய்யும் பணியில் மெட்ரோ ஒப்பந்த ஊழியர்கள் ஈடுபட்டு வரும் நிலையில். பணிகள் மந்தமாக நடைபெறுவதாகவும். இதனால் பிரதான சாலை ஒரு வழியாக மாற்றப்பட்ட ஒரு நிலையில்.அனைத்து வாகனங்களும் ஒரே பாதையில் எதிரும் புதிரும் செல்வதால் மிகக்கடுமையான போக்குவரத்து நெரிசல் என்பது ஏற்பட்டுள்ளது.மேலும் பள்ளி கல்லூரிகள் அதிகம் உள்ள பகுதி என்பதால் போர்க்கால அடிப்படையில் உடனடியாக உடைந்த ராட்சத குடிநீர் பைப்ஐ சரிசெய்து பள்ளத்தை மூடி உடனடியாக சாலையை பொது பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

MUST READ