- Advertisement -
சென்னையில் ஜூன் மாத இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. வரும் ஜூன் மாத இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்து உள்ளதாகவும், மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் களஆய்வு மேற்கொண்டு பொதுக்கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி கூறியுள்ளது.
மேலும், தேவைக்கேற்ப பூங்கா, மயான பூமிகள் உள்ளிட்ட இடங்களிலும் கழிப்பிடங்கள் கட்டப்பட உள்ளன என்று மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
விஜய் சம்பளத்தை டிக்ளேர் செய்ய தயாரா? – அமைச்சர் பன்னீர் செல்வம் சவால்



