Homeசெய்திகள்சென்னைவரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்

-

- Advertisement -

பொருளாதார ரீதியில் மிகவும் வசதியில்லாமல் இருந்தவர்களுக்கும் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம் சூட்டினார்.

வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தூத்துக்குடி மாவட்டம்  காமராஜ் கல்லூரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்இதனைத் தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் இராணி மேரி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள வேலு நாச்சியார் அரங்கத்தில், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு புதுமைப் பெண் திட்டத்தின் கீழ்  மாணவிகளுக்கு பற்று அட்டைகளை வழங்கினார்.  இன்று முதல் கட்டமாக சென்னை மாவட்டத்தில் மொத்தம் 2024 பேர் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர்.

வரலாற்று சிறப்புமிக்க திட்டம் புதுமைப் பெண் திட்டம் - தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றியவர் நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் என்றும் சமுதாயத்தில் அடிமட்டத்தில் இருக்கக்கூடிய மாணவிகளுக்கு கல்வி மூலம் விடுதலைப் பெற்று மென்மேலும் உயர வேண்டும் என்ற வகையில் இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்து உள்ளார் என்றார்.

பொருளாதார ரீதியில் மிகவும் வசதியில்லாமல் இருந்தவர்கள் சமூக ரீதியாக ஒதுக்கப்பட்டவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கும் வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். திராவிட மாடல் ஆட்சி மகளிருக்கான பெண்களுக்கான மாணவிகளுக்கான ஆட்சி, அனைவருக்கும் அனைத்தும் என்ற வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருவதாக கூறினார்.

தொடர்ந்து புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் பற்று அட்டைகளை பெற்ற மாணவிகள் பேசியது. நாங்கள் அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்றோம் எங்களுடன் எங்களது தோழிகள் அரசு பள்ளியில் படித்தார்கள் அவர்களுக்கு மாதம் மாதம் ஆயிரம் ரூபாய் வருகிறது. ஆனால் எங்களுக்கு வரவில்லையே என்ற ஏக்கம் நீண்ட நாட்களாக இருந்தது. ஆனால் தற்பொழுது முதலமைச்சர் எங்களுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்து இருப்பது எங்கள் கல்லூரி காலம் முழுவதும் பயனுள்ளதாக இருக்கும் என்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

MUST READ