Homeசெய்திகள்சென்னைஅனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை - சென்னை உயர்நீதி மன்றம்

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை – சென்னை உயர்நீதி மன்றம்

-

- Advertisement -

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக தூத்துக்குடி நீதிமன்றத்தில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கிற்கு தடை - சென்னை உயர்நீதி மன்றம்

we-r-hiring

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது தூத்துக்குடி நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சொத்துக் குவிப்பு வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில், அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவில், அனிதா ராதாகிருஷ்ணனை எதிர்த்து நடைபெற்று வரும் சொத்து குவிப்பு வழக்கை மதுரையில் உள்ள சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இதனை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கின் நிலை தொடர்பாக முழுமையான தகவல்கள் அவசியம் எனக் குறிப்பிட்டது.

இதனிடையே, லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்கின் தற்போதைய நிலை குறித்து பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், அமலாக்கத்துறை தரப்பும் தங்களது மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையிலும், கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடர்ந்து நடைபெறுவது பொருத்தமல்ல என வாதிட்டது.

இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது. அதுவரை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெறும் அனைத்து விசாரணைகளும் நிறுத்தப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வருமானத்தை மறைத்த விவகாரம்: விஜய் ஐகோர்ட்டில் மேல்முறையீடு….

MUST READ