spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைமணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மனு

மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மனு

-

- Advertisement -

“மணலி புதுநகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழு மெட்ரோ தலைமையகத்தில் மனு அளித்துள்ளது”

மணலி புது நகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மனு

we-r-hiring

1979 முதல் மணலி புதுநகர் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகி மக்கள் வசித்து வரும் நிலையில் இன்று வரையில் போக்குவரத்து என்பது மிகவும் சிரமமாக இருப்பதாக கூறி மெட்ரோ ரயில் சேவை கோரிக்கை குழுவினர் இன்று சென்னை நந்தனத்தில் உள்ள மெட்ரோ ரயில் சேவை தலைமையகத்தில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

மணலி புது நகருக்கு மெட்ரோ ரயில் சேவை அமைத்து தரக்கோரி மனு

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்குழுவினர், மணலி புதுநகர் பகுதியில் அறுபதாயிரத்துக்கும் அதிகமான குடியிருப்புகள் இருப்பதாகவும்,  1500 க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இங்கு பேருந்து சேவை முறையாக இல்லாத நிலையில் மெட்ரோ ரயில் சேவையை இணைப்பு சேவையாக வழங்குமாறு, பத்தாயிரம் மக்களிடம் கையொப்பம் பெற்று அந்த மனுவை மெட்ரோ ரயில் தலைமையகத்தில் அளித்துள்ளதாக குழுவினர் தெரிவித்தனர்.

எங்கள் மனுவை மெட்ரோ ரயில் நிறுவனம் பெற்றுக்கொண்டது. தேர்தல் முடிந்த பின்னர் இதற்கான நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளதாக தெரிவித்தார்.

MUST READ