அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக வரையப்பட்டுள்ள சுவர் ஓவியங்கள் பொதுமக்களை கவர்ந்துள்ளது.சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் பூங்காக்கள், ரயில் நிலையங்கள் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் உள்ளிட்ட சுவர்களில் தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் சுவர் ஓவியங்கள் வரையப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டை சிபி பவள வண்ணன் சுரங்கப் பாதையில் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் வண்ணமயமான ஓவியங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது.
பெட்டிக்கடைக்காரர், டீக்கடைக்காரர், இளநீர் விற்பவர், ஏறு தழுவும் வீரர், நடுத்தர வயது பெண் மற்றும் மூதாட்டி உள்ளிட்ட தத்ரூப ஓவியங்கள் அந்த வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏற்கெனவே இதே சுரங்கப் பாதையில் தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் தத்ரூபமான ஓவியம் வரையப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -