spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைதந்தை, மகன் மோதலால் சாமியாராகவே மாறிய சௌமியா அன்புமணி…

தந்தை, மகன் மோதலால் சாமியாராகவே மாறிய சௌமியா அன்புமணி…

-

- Advertisement -

பாமகவில் தந்தை மகனுக்குமான மோதல் ஒரு புறம் இருந்து வருகிற நிலையில் செளமியா அன்புமணி கோவில் கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் மயிலம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சௌமியா அன்புமணி சுவாமி தரிசனம் செய்தார்.தந்தை, மகன் மோதலால் சாமியாராகவே மாறிய சௌமியா அன்புமணி…திண்டிவனம் அருகேயுள்ள  மயிலம் மலை மேல் அமைந்துள்ள வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாரம்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் வீரபாபு தேவருக்கு சிறப்பு அபிஷேகங்களும் தீபாரனைகளும் செய்யப்படும். இன்றைய தினத்தில் முருக பக்தர்கள் வழிபாடு செய்து சாமி தரிசனம் செய்வர். இன்று நடைபெற்ற செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜையில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவரும், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் மனைவியுமான சௌமியா அன்புமணி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.தந்தை, மகன் மோதலால் சாமியாராகவே மாறிய சௌமியா அன்புமணி…செளமியாவுடன் மருத்துவர் ராமதாஸின் சகோதரி மகள் விஜயலட்சுமி, கனிமொழி உடன் இருந்தனர். கணவர் அன்புமணிக்கும் மாமனார் ராமதாசுக்கும் மோதல் இருந்து வருகிற நிலையில் நேற்றைய தினம் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம் செய்த செளமியா அன்புமணி இன்றைய தினம் மயிலம் முருகன் கோவிலில் தரிசனம் செய்து வழிபட்டு வருகிறார். சில தினங்களாகவே கோவில் கோவிலாக  சென்று செளமியா அன்புமணி  சாமி தரிசனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

 

we-r-hiring

 

 

தென்மேற்கு பருவமழையால் வெள்ளக் காடாக மாறிய குஜராத்…

MUST READ