spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைஜவாஹிருல்லா தலைமையில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை…

ஜவாஹிருல்லா தலைமையில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை…

-

- Advertisement -

பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்பட்ட வருகிறது. பக்ரீத் பண்டிகையையொட்டி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் தொழுகையில் ஈடுபட்டனர்.ஜவாஹிருல்லா தலைமையில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை…சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளி  வளாகத்தில்  தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழக தலைவர் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ  தலைமையில் தொழுகை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தாா்.ஜவாஹிருல்லா தலைமையில் பக்ரீத் பெருநாள் சிறப்பு தொழுகை…பக்ரீத் திருநாளான இன்று நாடு முழுவதும் பக்ரித் பண்டிகை மிக விமா்சையாக   கொண்டாடப்பட்டு வருகிறது. அனைவரும் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகிறோம். அனைவரும் சமம் என்பதை பறைசாற்றக்கூடிய ஹஜ் கடமையை உலகம் எங்கும் வாழக்கூடிய முஸ்லீம்கள் செய்து வருகிறார்கள்.  இந்த தியாகத் திருநாளில் நமது நாட்டில் வாழக்கூடிய மக்களுக்கு அமைதியும் சாந்தமும் சுபிட்சமும் சமூக நல்லிணக்கமும்  கிடைக்க வேண்டி பிரார்த்தனை செய்ததாக  தெரிவித்தார்.

சோதனையை சாதனையாக மாற்றிய அரசு பள்ளி மாணவி

MUST READ