spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சென்னைசென்னையில் 57-வது மாநாடு… அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்…

சென்னையில் 57-வது மாநாடு… அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தார்…

-

- Advertisement -

சென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவன தென்னிந்திய மண்டல கவுன்சிலின் 57-வது மாநாட்டை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.சென்னையில் 57-வது மாநாடு… அமைச்சர் அன்பரசன் துவக்கி வைத்தாா்…இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவனத்தின் தென்னிந்திய மண்டல கவுன்சிலின்(ஐ சி ஏ ஐ – எஸ் ஐ ஆா் சி) 57-ஆவது மாநாட்டை சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் தொடங்கி வைத்தார். இதில் சர்வதேச பட்டயக் கணக்காளர்கள் கூட்டமைப்பின் (ஐஎப்ஏசி) துணைத் தலைவர் டேரின் ரூல்டன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். “ஆக்கம் மேலும் உயர்வை நோக்கிய முன்னேற்றம்” என்ற தலைப்பில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் தென் பிராந்தியத்தைச் சோ்ந்த பட்டயகணக்காளா்கள், கொள்கை வகுப்பாளா்கள், உலகளாவிய கணக்கியல் தலைவா்கள், தலைமை நிதி அதிகாரிகள், மூத்த வழக்கறிஞா்கள், தொழில்துறை பங்குதாரா்கள் உள்பட 3,500-க்கும் அதிகமான பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில், வருமான வரி மசோதா 2025, ஜிஎஸ்டி, சைபர் பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம், பணமோசடி தடுப்பு சட்டம் உள்ளிட்ட 14 தொழில்நுட்ப அமர்வுகள் நடைபெறுகின்றன.

மேலும் இந்தியாவின் முன்னணி ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் நிதித்துறையின் டிஜிட்டல் மாற்றம் குறித்து குழு விவாதங்களும் இதில் நடைபெறுகின்றன. தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், “உலகமயமாக்கல், தடையில்லா வர்த்தகம் மற்றும் கட்டணங்கள் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம்” என்ற தலைப்பில் நாளை, சனிக்கிழமை சிறப்புரை ஆற்றுகிறார்.

we-r-hiring

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன்

இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சிக்கு மிகச் சிறப்பாக பணியாற்றி வருவதாகவும் உலகிலேயே மிகப்பெரிய கணக்காளர் இந்திய பட்டய கணக்காளர் நிறுவனம் என்றுய்  குறிப்பிட்டார். இந்த நிறுவனம் மிகச் சிறப்பாக பணியாற்றி வருவது தமிழகத்துக்கு கிடைத்த பெருமை என அவர் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், பட்டயக் கணக்காளர்களின் பணி மிக மிக சிறப்பான பணி என்றார். பெரு நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுக்கு தலைவர்களாகவும் நிர்வாக இயக்குனர்களாகவும் தலைமை செயல் அதிகாரிகளாகவும் பட்டயக் கணக்காளர்கள் பணியாற்றி வருவதாகவும் சிறு நிறுவனங்கள் வணிக நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி நிறுவனங்களின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய துணையாக உள்ளனர்  என்றும் அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், நிறுவனங்களில் நடைபெறக்கூடிய மோசடிகளை கண்டறிந்து, தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் பட்டய கணக்காளர்கள் என பெருமிதம் தெரிவித்தார். இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பவர்கள் பட்டயக் கணக்காளர்கள் என்றும் அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையே நிதி ஒருங்கிணைப்பபை ஏற்படுத்தி நாட்டில் ஆரோக்கியமான தொழில் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருப்பவர்கள் பட்டய கணக்காளர்கள் என்றும் தணிக்கை செய்தல், வருமான வரி, ஜிஎஸ்டி வரி தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதுடன் வரி சேமிப்பு, நிதி மேலாண்மை முதலீடு புதிய தொழில் தொடங்குவதற்கு உதவி புரிபவர்கள் பட்டயக் கணக்காளர்கள் என்றும் கூறினார்.

கோவையில் உலகளாவிய ஸ்டார்ட் அப் மாநாடு 2025,  வரும் அக்டோபா் 9 மற்றும் 10-ம் தேதிகளில் நடத்தப்படும் என்றும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்தார். கடந்த 1999 ஆம் ஆண்டு நடைபெற்ற பட்டய கணக்காளர் பொன்விழா ஆண்டில் முத்தமிழர் டாக்டர் கலைஞர் கலந்துகொண்டு பேசும்பொழுது, ஒருவருக்கு நல்ல வழக்கறிஞர், நல்ல மருத்துவர், நல்ல ஆடிட்டர் கிடைத்தால் நம்முடைய வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது என்றும் மேலும் மேலும் உயர்வார்கள். அதனையே தாமும் வழிமொழிந்து, மாநாடு வெற்றியடைய வாழ்த்துகளை தெரிவிப்பதாக அமைச்சர் தா.மோ. அன்பரசன் கூறினார்.

கொடுத்த வாக்குறுதிகள் ஒன்றை கூட நிறைவேற்றாத பா ஜ க – நாராயணசாமி குற்றச்சாட்டு

MUST READ