பிரபல மலையாள நடிகர் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன், அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது படமான பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படத்திலும் நடிக்கிறார். இப்படம் 2025 செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இது தவிர சிவகார்த்திகேயன், வெங்கட் பிரபு, சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி இருக்கிறார். மேலும் இவர், குட் நைட் பட இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்திலும் புதிய படத்தில் போவதாக பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும், சிவகார்த்திகேயன் அடுத்த படம் இதுவாக இருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் தொடர்பான லேட்டஸ்ட் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது இப்படமானது அப்பா- மகன் உறவை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறதாம். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பாவாக மலையாள நடிகர் மோகன்லாலை நடிக்க வைக்க திட்டமிட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இந்த தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கும் நிலையில், இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.