குட் பேட் அக்லி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
அஜித்தின் 63 வது படமாக உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 10ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்த படத்தை மார்க் ஆண்டனி பட இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். விடாமுயற்சி படத்திற்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கும் இந்த படத்தில் அஜித் பல கெட்டப்புகளில் நடித்திருக்கிறார், அதேபோன்று இந்த படத்தில் ‘தொட்டு தொட்டு பேசும் சுல்தானா’ பாடல் ரீமேக் செய்யப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இவ்வாறு இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் ஒவ்வொன்றாக வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏற்கனவே அஜித்தின் விண்டேஜ் படங்களின் குறியீடுகள் இடம் பெற்றிருந்த டீசர் வெளியாகி தற்போது வரையிலும் ரசிகர்களை கொண்டாட வைத்திருக்கிறது. அதைத்தொடர்ந்து வெளியான OG சம்பவம் பாடலும், God bless U பாடலும் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் நாளை (ஏப்ரல் 3) இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தின் மூன்றாவது பாடல் வருகின்ற ஏப்ரல் 7ஆம் தேதி வெளியாகும் என புதிய தகவல் வெளிவந்துள்ளது.
அதாவது அஜித்தின் தீவிர ரசிகனான ஆதிக் ரவிச்சந்திரன், ரசிகர்கள் அஜித்தை எப்படி எல்லாம் பார்க்க நினைத்தார்களோ அப்படி எல்லாம் இந்த படத்தில் காட்டியிருப்பார் என நம்பப்படுகிறது. எனவே இந்த படம் ரிலீஸ் ஆகும் வரை ரசிகர்களுக்கு விருந்து படைப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் குட் பேட் அக்லி படத்திலிருந்து வெளியாகும் அடுத்த பாடல் ‘தொட்டுத் தொட்டு பேசும் சுல்தானா’ பாடலின் ரீமேக் ஆக இருக்கலாம் என பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.