spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமக்கள் அனைவரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் - நடிகர் ஹரிஷ் கோரிக்கை

மக்கள் அனைவரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் – நடிகர் ஹரிஷ் கோரிக்கை

-

- Advertisement -

நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.மக்கள் அனைவரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் - நடிகர் ஹரிஷ் கோரிக்கைதீபாவளி திருநாளை ஒட்டி, நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள டீசா் திரைப்பட  நடிகர் ஹரிஷ் கல்யாண், நடிகை அதுல்யா ரவி, இயக்குனர், உள்ளிட்ட திரைப்பட குழுவினர் இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்தனர்.

தீபாவளியை ஒட்டி தனது திரைப்படம் வெளியாக உள்ளது மிகவும் சந்தோஷத்தை அளிப்பதாகவும் மக்கள் அனைவரும் தியேட்டருக்கு சென்று படம் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்த நடிகர் வெற்றி பெற அனைவரும் கடுமையாக உழைத்திருப்பதாகவும் அதிரடி பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்கும் என்றும் தெரிவித்தார். அண்ணாமலையார் திருக்கோவிலுக்கு வருகை தந்த நடிகர் மற்றும் நடிகையுடன் பக்தர்கள் திருக்கோவில் ஊழியர்கள் என அனைவரும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரன் ரூ.95 ஆயிரத்தை தாண்டியது..!!

we-r-hiring

MUST READ