Homeசெய்திகள்சினிமாஎல்லாரும் லோன் போட்டு படிக்க தான் போவாங்க நான் நடிக்க போனேன்.... 'அமரன்' குறித்து லல்லு...

எல்லாரும் லோன் போட்டு படிக்க தான் போவாங்க நான் நடிக்க போனேன்…. ‘அமரன்’ குறித்து லல்லு பேட்டி!

-

- Advertisement -

அமரன் படம் குறித்த நடிகர் லல்லு பேட்டி அளித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருந்த அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகிய இருவரும் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எல்லாரும் லோன் போட்டு படிக்க தான் போவாங்க நான் நடிக்க போனேன்.... 'அமரன்' குறித்து லல்லு பேட்டி!இந்த படம் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டிருந்தது. மேலும் இந்த படம் வெளியான முதல் நாளில் இருந்தே பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து நடிகர் லல்லு சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அவர் கூறியதாவது, “பெரும்பாலான ராணுவ படங்கள் போர் சம்பந்தமானதாக இருக்கும். ஆனால் இந்த படம் வேறு பக்கத்தை காட்டுகிறது. எல்லாரும் லோன் போட்டு படிக்க தான் போவாங்க நான் நடிக்க போனேன்.... 'அமரன்' குறித்து லல்லு பேட்டி!இந்த படத்தில் நடித்ததன் மூலம் எனக்கு என்ன கிடைத்திருக்கிறது என்பதை பற்றி நான் யோசிக்கவில்லை. என் பிரண்ட்ஸ், உறவினர்கள் எல்லாரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாய் என்று சொல்லி பாராட்டினார்கள். அது எனக்கு மகிழ்ச்சியை தந்தது. நிறைய படங்களில் ஹீரோவிற்கு பிரண்டாக நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரத்திற்கு பெயர் கூட இருக்காது. ஆனால் இப்போது அமரன் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்த பெயர் மக்கள் மனதில் பதிந்திருக்கும் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அமரன் படம் தான் என்னுடைய முதல் படம் போல் தோன்றுகிறது. எல்லாரும் லோன் போட்டு படிக்க தான் போவாங்க நான் நடிக்க போனேன்.... 'அமரன்' குறித்து லல்லு பேட்டி!கொரோனா காலகட்டத்தில் ஊருக்கு போயிட்டு திரும்ப வரும்போது நம் கேரியரை முதலில் இருந்து தொடங்க வேண்டும். எனவே என்ன பண்ண வேண்டும் என்பது தெரியாமல் இருந்தேன். அப்போதுதான் ராஜ்குமார் பெரியசாமி, அமரன் படம் குறித்து சொன்னார். படம் முழுக்க காஷ்மீரில் நடக்கும் என்று சொன்னார். அதனால் காஷ்மீருக்கு போகணும். அங்குள்ள குளிரை தாங்க வேண்டும் என்றால் பல பொருட்களை வாங்க வேண்டும். அதனால லோன் வாங்கினேன். எல்லோரும் லோன் வாங்கி படிக்க போவாங்க. ஆனால் நான் லோன் வாங்கி நடிக்க போனேன்” என்று கூறினார்.

மேலும் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன், உங்களிடம் ஒரு தகவலை பகிர்ந்து கொள்வார். அந்தக் காட்சி அனைவரையும் ரொம்பவே பாதிப்படைய வைத்தது. அந்த காட்சி உங்களுக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியது? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. எல்லாரும் லோன் போட்டு படிக்க தான் போவாங்க நான் நடிக்க போனேன்.... 'அமரன்' குறித்து லல்லு பேட்டி!அதற்கு பதில் அளித்த லல்லு, “அந்த காட்சியின் மூலம் முகுந்த் சார் கூட இருக்கிறவங்களோட மனநிலையை புரிந்து கொள்ள முடிந்தது. உயிர் எல்லோருக்கும் முக்கியம்தான். ஆனால் அவர்கள் அதை நாட்டுக்காக தியாகம் செய்கிறார்கள். அச்சமில்லை அச்சமில்லை பாடலை நாங்கள் பாடும் காட்சி மிகவும் பவர்ஃபுல்லானது. படத்தில் இருக்கும் ஒவ்வொரு எமோஷனல் காட்சியும் நிஜ வாழ்க்கையிலிருந்து கனெக்ட் செய்யும் விதமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

அமரன் படத்தில் நடிகர் லல்லு, ரவிசங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ