Homeசெய்திகள்சினிமாஅட்லீ, ஷாருக் கான் கூட்டணியின் 'ஜவான்' படத்தில் இணைந்த அல்லு அர்ஜுன்!

அட்லீ, ஷாருக் கான் கூட்டணியின் ‘ஜவான்’ படத்தில் இணைந்த அல்லு அர்ஜுன்!

-

ஷாருக் கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தில் அர்ஜுன் அர்ஜுன் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழில் சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்த அட்லீ தற்போது இந்தியில் பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடிப்பில் ‘ஜவான்’ என்ற புதிய படத்தை இயக்கி வருகிறார்.

jawan
jawan

இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் இருக்கின்றனர்.

தற்போது இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. ஆம், அவர் ஜவான் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிக்கிறாராம்.

இதற்கு முன்னர் இந்த மாதிரி செய்திகள் வெளியான போது அதை அல்லு அர்ஜுன் மறுத்தார். ஆனால் தற்போது படப்பிடிப்பில் இணைந்துள்ளாதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜவான் படம் ஆயுத பூஜை பண்டிகையை ஒட்டி படம் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. ஜவான் படத்தை ஷாருக் கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். ஜவான் திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

MUST READ