Homeசெய்திகள்சினிமாதனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

தனுஷ் நடிப்பில் வெளியான ‘ராயன்’ படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

-

தனுஷ் நடிப்பில் வெளியான ராயன் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?

நடிகர் தனுஷ் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான பவர் பாண்டி எனும் திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டார். அடுத்ததாக தனது 50வது திரைப்படமான ராயன் திரைப்படத்தையும் தானே இயக்கி நடித்திருந்தார். இந்த படமானது கடந்த ஜூலை 26 தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த படம் உலகம் முழுவதும் தற்போது வரை 130 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தனுஷ் நடிப்பில் வெளியான 'ராயன்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது?இவ்வாறு தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வரும் ராயன் திரைப்படம் இரண்டு வாரங்களை கடந்து மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் வெற்றி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் 30 அன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ