Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் கவனம் செலுத்தும் தனுஷ்... அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம்... தெலுங்கில் கவனம் செலுத்தும் தனுஷ்… அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தம்…
- Advertisement -

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் தனுஷூக்கு, தொடக்கத்தில் கிடைத்தவை அனைத்தும் தோல்விகள், விமர்சனங்கள் மற்றும் அவமானங்கள் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும். அவரது நடிப்பில் வெளியான படங்கள் வெற்றிப் படங்களாக இருந்தாலும், தனுஷ் உருவகேலி செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல ஹிட்களை கொடுக்கத் தொடங்கிய தனுஷ், முன்னணி நடிகராக உருவெடுத்தார். தனுஷ் நடிப்பில் காதல், கமர்ஷியல் மற்றும் காமெடி படங்கள் பல வந்துள்ளன.

தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி மொழிப் படங்களிலும் அவர் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கில் வாத்தி படத்தில் நடித்த, தனுஷ் அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் கமிட்டாகி வருகிறார்

தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்திற்கு குபேரா என்று தலைப்பு வைக்கபட்டுள்ளது. இதில் ராஷ்மிகா மந்தனா, நாகர்ஜூனா ஆகியோர் நடிக்கின்றனர். இதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் தனுஷ் நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தில் ராஜூ இத்திரைப்படத்தை தயாரிக்கிறாராம். இப்படத்தை தெலுங்கு இயக்குநர் கிஷோர் இயக்குகிறார். மேலும், ஸ்ரீலீலா நாயகியாக நடிப்பதாக கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.