- Advertisement -
தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாக பெயர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தில் தொடங்கிய தனுஷின் திரைப்பயணம் இன்று வரை வெற்றிகரமாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. தொடக்கத்தில் அவரது உடல் தோற்றத்திற்கும், நிறத்திற்கும் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். விமர்சனங்களுக்கு தனது திரைப்படங்கள் வாயிலாகவும், நடிப்பின் வாயிலாகவும் பதில் கொடுத்து வாயை அடைத்தார் நடிகர் தனுஷ்.
அதே சமயம் தனுஷ் தனது ஐம்பதாவது படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் மீண்டும் இத்திரைப்படத்தை இயக்கி நடித்திருக்கிறார். முன்னதாக பா.பாண்டி படத்தை இயக்கி நடித்தார். இப்படத்தில், எஸ் ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அனிகா சுரேந்திரன், அபர்ணா பாலமுரளி, சந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
https://x.com/i/status/1794368388816601272