spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ஒப்பிடுகையில் இந்தி சினிமா பின்தங்கி உள்ளது - இயக்குநர் அனுராக்

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை ஒப்பிடுகையில் இந்தி சினிமா பின்தங்கி உள்ளது – இயக்குநர் அனுராக்

-

- Advertisement -
மலையாளத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வரும் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய முடியும் என பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். மேலும், இந்தி சினிமா மிகவும் பின்தங்கி இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஓரிரு திரைப்படங்கள் மட்டும் மலையாள மொழியைத் தாண்டி தமிழ் மொழியிலும் மற்ற மொழிகளிலும் வரவேற்பை பெற்று ஹிட் அடித்திருக்கின்றன. த்ரிஷயம், ஹிருதயம், சிபிஐ, பிரேமம் உள்ளிட்டவை இவற்றில் அடங்கும். அந்த வகையில் கடந்த சில மாதங்களாக மலையாள மொழியில் வெளியாகும் அனைத்து படங்களுமே மோலிவுட்டை தாண்டி பல மொழிகளில் படம் ஹிட் அடிக்கின்றன. அதில் மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படம் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

we-r-hiring
இயக்குநர் சிதம்பரம் இயக்கிய இத்திரைப்படத்தில், ஸ்ரீநாத் பாசி, சௌபின் சாஹிர், உள்ளிட்ட பலர் இத்திரைப்படத்தில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு செல்லும் நண்பர்களுக்கு ஏற்படும் சம்பவங்கள், ஒருவருக்காக நண்பர்கள் இறங்கிச் செல்லும் நிகழ்வுகள், இது தான் இத்திரைப்படத்தின் அடித்தளக்கதை. மஞ்சும்மல் பாய்ஸ் திரைப்படத்தை மலையாள பிரபலங்கள் மட்டுமன்றி தமிழ் நட்சத்திரங்களும் பாராட்டி வருகின்றனர். கமல்ஹாசன் , ரஜினிகாந்த், தனுஷ், விக்ரம், கௌதம் மேனன் என தமிழ் நட்சத்திரங்கள் பலரும் படத்தை கண்டு ரசித்ததோடு, படக்குழுவையும் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மஞ்சும்மல் பாய்ஸ் போன்ற கதைகளை இந்தியில் ரீமேக் செய்ய முடியும் என இயக்குநர் அனுராக் காஷ்யப் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், மிக எளிமையான, வியக்க வைக்கும் திரைப்படம். என்னவொரு தன்னம்பிக்கையாக அசாத்தியமான கதையை சொல்லியிருக்கின்றனர். இந்தியாவில் எடுத்த மிகப்பெரிய பட்ஜெட் திரைப்படங்களை விட இது மிகச்சிறந்த திரைப்படம் என்றும் அவர் வெகுவாக பாராட்டி இருக்கிறார். மேலும், இந்த படத்தை ஒப்பிடுகையில் இந்தி சினிமா மிகவும் பின்தங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

MUST READ