சந்திரமுகி 2 படத்தின் முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.
பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா, பிரபு, வடிவேலு மற்றும் பலர் நடித்த சந்திரமுகி திரைப்படம் கடந்த 2005ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு 17 ஆண்டுகள் கழித்து, சந்திரமுகி இரண்டாம் பாகத்தை பி. வாசு இயக்கியுள்ளார். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், லட்சுமிமேனன், ராதிகா, வடிவேலு, மகிமா நம்பியார் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப்படம் லைக் அப் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் எம் எம் கீரவாணியின் இசையிலும் உருவாகியுள்ளது.
ஆர் டி ராஜசேகர் இதற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
மேலும் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாகவும் செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் தற்போது ‘சந்திரமுகி 2′ படத்தின் முக்கிய அப்டேட் நாளை (ஜூன் 29) மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.