தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1500 க்கும் அதிகமானோரை தனது மகளின் திருமணத்திற்கு வரவழைத்துள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பாளரும், வேல்ஸ் யுனிவர்சிட்டியின் நிறுவனருமான ஐசரி கணேஷ் கிட்டதட்ட 25 க்கும் அதிகமான வெற்றி படங்களை தயாரித்துள்ளார். இந்நிலையில் ஐசரி கணேஷின் மகள் நேற்று (மே 9) சென்னையில் கோலாகாலமாக நடைபெற்றது. இதற்காக ரூ. 30 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டிருந்தது. மேலும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ஐசரி கணேஷ் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவிற்கு ரஜினி, கமல், மணிரத்னம், ரவி மோகன், கௌதம் மேனன் பலரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதைத்தொடர்ந்து ஐசரி கணேஷ் மாற்றுத்திறனாளிகளை பெரிய அளவில் வரவேற்று, அவர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கும்படி ஏற்பாடு செய்திருக்கிறார்.
பெரிய மனசு ஐயா உங்களுக்கு பெரும் மகிழ்ச்சி❤️
At #IshariGanesh ‘s daughter’s wedding 1500+ guests including orphans, seniors & people with disabilities were honored ❤️#VelsWedding
— RamKumarr (@ramk8059) May 10, 2025
அதற்காக போடப்பட்டிருந்த பிரம்மாண்டமான செட்டில் மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் உள்ளிட்ட 1500க்கும் அதிகமானவர்களை வரவேற்று அவர்களுக்கு சிறப்பு, மரியாதை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் மட்டுமல்லாமல் வயதானவர்களும் திருமணத்தில் பங்கேற்றனர். அவர்களிடம் ஐசரி கணேஷ், ஐசரி கணேசன் மகள், மருமகன் வாழ்த்து பெற்றுக்கொண்டனர். இது தொடர்பான வீடியோவும், புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து ஐசரி கணேஷை பாராட்டி வருகின்றனர்.