‘லவ் டுடே’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு, கமல்ஹாசன் தயாரிப்பில், பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்குகிறார் இயக்குனர் விக்னேஷ் சிவன்!
நடிகர் கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான (RKFI) ராஜ்கமல் தற்போது அதிகப்படியான படங்களை தொடர்ந்து தயாரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து அடுத்த படத்தை தயாரிக்க உள்ள கமல், மணிரத்னம் இயக்கும் தனது 234 ஆவது படத்தை தனது நிறுவனம் மூலமே தயாரிக்கிறார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தேசிங்கு பெரியசாமி இயக்க நடிகர் சிலம்பரசனின் படத்தை தயாரிப்பதாகவும் ராஜ்கமல் அறிவித்தது.
இந்த படங்களுக்கு பிறகாக தற்போது ’லவ் டுடே’ படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படத்தை ராஜ்கமல் தயாரிக்கிறது. இந்த படத்தை அஜித்தின் 62வது படத்தில் இருந்து விலகிய இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
’லவ் டுடே’ படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் ஜெயம் ரவியை வைத்து மீண்டும் பதிய திரைப்படம் இயக்குகிறார், இவரே மீண்டும் இயக்கி நடிக்கிறார், ரஜினியை வைத்து படம் இயக்குகிறார் என பல செய்திகள் பரவலாக பேசப்பட்டடு வந்தது.
இந்நிலையில் தற்போது இறுதியாக விக்னேஷ் சிவன் படத்தில் நடிப்பது உறுதியாகி உள்ளது.