spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஃபுல் எனர்ஜியுடன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

ஃபுல் எனர்ஜியுடன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

-

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.ஃபுல் எனர்ஜியுடன் ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்!

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த அக்டோபர் மாதம் வேட்டையன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இப்படமானது அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரஜினி, நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் விரைவில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.

we-r-hiring

இந்நிலையில் புத்தாண்டு தினமான இன்று (ஜனவரி 1) ரசிகர்கள் பலரும் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டின் முன் காலையிலிருந்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ரஜினியின் வீட்டிற்கு முன்பாக திரண்டனர். எனவே ரஜினி வீட்டிற்கு வெளியே வந்து, ரசிகர்களை பார்த்து கரம் கூப்பி வணங்கி, கையைசைத்து ஃபுல் எனர்ஜியுடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தில் ஆர்ப்பரித்தனர். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

MUST READ