கடந்த 2021 ஆம் ஆண்டு டிஜே ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து மணிகண்டன், ரஜிஷா விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படம் நடிகர் மணிகண்டன் ராஜாக்கண்ணு என்னும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மணிகண்டனுக்கு ஜெய் பீம் படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து விநாயக் சந்திரசேகரன் இயக்கிய குட் நைட் திரைப்படத்தில் ஹீரோவாக மணிகண்டன் நடித்திருந்தார். எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான இந்த படத்திலும் தனது சிறப்பான எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார் மணிகண்டன். அதை தொடர்ந்து அதர்வா நடிப்பில் வெளியான மத்தகம் என்ற வெப் தொடரில் வில்லனாக நடித்திருந்தார்.
இவ்வாறு தொடர்ந்து பல படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி வரும் மணிகண்டன் லவ்வர் எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக கௌரி பிரியா ரெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் கண்ணன் ரவி, ஹரிஷ் குமார் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனமும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. இதனை அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்துள்ளார்.
#LOVER “Apple Crumble” Promo ❤️
Full song in #Siddharth vocal drops this Evening at 5pm 🥳pic.twitter.com/XQwfvfFMQL
— Kolly Corner (@kollycorner) January 22, 2024

சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. அதைத்தொடர்ந்து படத்தின் டீசரும் முதல் இரண்டு பாடல்களும் வெளியாகி கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாவது பாடல் இன்று மாலை 5 மணி அளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் கிரம்பில் எனும் பாடலை நடிகர் சித்தார்த் பாடியுள்ளார். மேலும் இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.