பிரபல உள்ளூர் கலைஞர் சிங்கப்பூர் சிவாஜி காலமானார்.
திரைத்துறையில் நடிக்கும் நடிகர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதன்படி அந்த நடிகர்கள் மீது கொண்ட அளவுக்கு அதிகமான அன்பு காரணமாக அவர்களைப் போலவே வேடமிட்டு நடித்து வருபவர்களும் இருக்கிறார்கள். அந்த வகையில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, விஜயகாந்த், கமல் ஆகியோரைப் போன்று வேடமிட்டு நடிப்பவர்களும் கலைஞர்களே. அவர்களில் மிகவும் பிரபலமானவர் சிங்கப்பூர் சிவாஜி என்று அழைக்கப்படும் சிங்கப்பூர் தமிழர் அசோகன். இவர் பல்வேறு திருமண விழாக்கள், பிறந்தநாள் விழாக்களில் சிவாஜி போன்று நடனமாடி பார்வையாளர்களை மகிழ்விப்பார். இதனால் தான் இவரை பலரும் சிங்கப்பூர் சிவாஜி என்ற பெயரும் வந்தது. தமிழ்நாட்டிலும் ஏராளமான நிகழ்ச்சிகளில் சிவாஜிக்கு போல் நடனமாடும் இவர் சில மலேசிய தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் சிங்கப்பூர் சிவாஜி, சிங்கப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சிவாஜி போன்று வேடம் விட்டு ஆடிக்கொண்டிருந்த நிலையில் அப்படியே மயங்கி கீழே விழுந்தார். அதைத்தொடர்ந்து அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மாரடைப்பு காரணமாக இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது சிங்கப்பூர் சிவாஜியின் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இவருடைய மரணத்திற்கு நடிகர் பிரபு தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.