spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇதிலும் மகத்தான வெற்றியடைய வேண்டும் .... அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

இதிலும் மகத்தான வெற்றியடைய வேண்டும் …. அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

-

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் அஜித்தை வாழ்த்தி உள்ளார்.இதிலும் மகத்தான வெற்றியடைய வேண்டும் .... அஜித்தை வாழ்த்திய சிவகார்த்திகேயன்!

நடிகர் அஜித் நடிப்பதில் மட்டுமல்லாமல் ரேஸிங்கிலும் ஆர்வம் உடையவர். அதன்படி தன்னுடைய 62 வது படமான விடாமுயற்சி மற்றும் 63வது படமான குட் பேட் அக்லி ஆகிய படங்களை முடித்துவிட்டு கார் ரேஸிங்கில் பங்கேற்க துபாய் சென்றுள்ளார் அஜித். இதற்காக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அஜித்குமார் ரேஸிங் என்ற கார் ரேஸிங் அணியை தொடங்கி கடந்த சில மாதங்களாக அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். அதைத்தொடர்ந்து துபாய் சென்று தனது அணியினருடன் தீவிரமாக பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது அஜித்தின் கார் தடுப்பு சுவரில் மோதி விபத்து ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக நடிகர் அஜித்துக்கு எந்தவித காயம் ஏற்படவில்லை. மேலும் தனது ரேஸிங் அனுபவம் குறித்து பேட்டி அளித்த அஜித், அடுத்த 9 மாதங்களுக்கு எந்த படத்தில் நடிக்கப் போவதில்லை எனவும் ரேஸிங்கில் தான் சாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் இன்று (ஜனவரி 11) துபாயில் நடைபெறும் 24H பந்தயத்தில் நடிகர் அஜித் மற்றும் அவரது குழுவினர் வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

we-r-hiring

அதேசமயம் திரைப்பிரபலங்களும் அவருக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதள பக்கத்தில் அஜித்துக்கு வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “அஜித் சார், துபாயில் நடைபெறும் 24H தொடரில் பங்கேற்பதற்காக வாழ்த்துக்கள். உங்களுடைய தீவிர ஆர்வமும் அர்ப்பணிப்பும் எப்போதும் எங்களுக்கு ஊக்கமளிக்கின்றன. இதிலும் மகத்தான வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

MUST READ