Homeசெய்திகள்சினிமாகுதிரை, கழுகு, நாய் உடன் சீறிப்பாயும் வீரன்... சூர்யா படத்தின் டைட்டில் வெளியானது!

குதிரை, கழுகு, நாய் உடன் சீறிப்பாயும் வீரன்… சூர்யா படத்தின் டைட்டில் வெளியானது!

-

- Advertisement -

சூர்யா நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவர். ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த இமாலய வரவேற்பை அடுத்து தற்போது அவர் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ் லீ, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக உருவாகிறது. இந்தியாவின் 10 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது. படத்திற்கு பான் இந்தியா அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் சூர்யா 42 படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு கங்குவா என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. கங்குவா என்றால் நெருப்பின் சக்தி கொண்ட வீரன் என்று பொருளாம்.

போஸ்டரில் சூர்யா மிருகத்தின் மண்டை ஓட்டினால் ஆன முகமூடி அணிந்து மிரட்டலாகக் காணப்படுகிறார். மேலும் உடன் குதிரை, நாய் மற்றும் கழுகு ஆகியவையும் சீறிப்பாய்ந்து வருகின்றன. மோஷன் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

MUST READ