spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஜீவா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

-

- Advertisement -

நடிகர் ஜீவாவின் புதிய படத்திற்கு ”தலைவர் தம்பி தலைமையில்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.ஜீவா நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு…

நடிகர் ஜீவா கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் ”தலைவர் தம்பி தலைமையில்” என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. கண்ணன் ரவி குரூப் சார்பில் கண்ணன் ரவி தயாரிக்க, நிதிஷ் சஹதேவ் இயக்குகிறார்.

we-r-hiring

குடும்பங்களோடு சேர்ந்து அனைவரும் கொண்டாடும் வகையில், உணர்வுப்பூர்வ அம்சங்களுடன்  காதல், காமெடி கலந்து கலக்கலான கமர்ஷியல் படமாக  ”தலைவர் தம்பி தலைமையில்” உருவாகியுள்ளது. இப்படத்தில்  ஜீவா நாயகனாக நடிக்க தம்பி ராமையா, இளவரசு, பிராத்தனா நாதன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டிரெய்லர் மற்றும்  இசை வெளியீடு பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளன.

மிகவும் எதிர்பார்த்த தனுஷின் ‘இட்லி கடை’…. ட்விட்டர் விமர்சனம் இதோ!

MUST READ