spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇரண்டாவது திருமணம் செய்தார் சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா

இரண்டாவது திருமணம் செய்தார் சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா

-

- Advertisement -
kadalkanni

நாதஸ்வரம் என்ற தொடரில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா. இந்த தொடர் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து குலதெய்வம், என் இனியத் தோழி, கல்யாணமாம் கல்யாணம், கல்யாணப் பரிசு, மகராசி என பல தொடர்களில் நடித்து பிரபலம் அடைந்தார். இவர் வௌ்ளித்திரையில் பிரபலம் இல்லாவிட்டாலும், சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆவார். சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும், இல்லத்தரசிகள் மத்தியிலும் தனக்கென தனியிடம் பிடித்தவர் ஸ்ரித்திகா

இவர் சனேஷ் என்பவரை கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று விட்டனர். இந்நிலையில், நடிகை ஸ்ரித்திகா மகராசி தொடரில் அவருடன் இணைந்து நடித்த ஆர்யனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இருவரின் வரவேற்பு நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

இருவரும் ஒன்றாக இணைந்து நடித்தபோது, காதல் மலர்ந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால் இதற்கு முந்தைய பேட்டிகளில் இருவருமே நண்பர்கள் என்று தான் தெரிவித்திருந்தனர். மேலும், ஆர்யனுக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ