வாடிவாசல் திரைப்படம் மூன்று பாகங்களாக உருவாக உள்ளது என புதிய தகவல் வெளியாகி இருக்கிறது.
தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வரும் வெற்றிமாறன் தற்போது விடுதலை 2 திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி நடை போட்டு வருகிறது. இதை தொடர்ந்து வெற்றிமாறன், சூர்யா நடிப்பில் வாடிவாசல் திரைப்படத்தை இயக்க இருக்கிறார். இந்த படம் சூர்யாவின் 46வது திரைப்படமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் ஏற்கனவே நடைபெரும் சூர்யா இந்த படத்திற்காக காளைகளை அடக்கும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் வெற்றிமாறன், விடுதலை 2 திரைப்படத்தில் கவனம் செலுத்தியதால் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு தாமதமானது. இதற்கிடையில் நடிகர் சூர்யாவும் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதை முடித்த பிறகு சூர்யா, வாடிவாசல் படத்தில் இணைவார் என்று சொல்லப்படுகிறது.
அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தொடங்கும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் வாடிவாசல் திரைப்படத்தை மூன்று பாகங்களாக இயக்க வெற்றிமாறன் திட்டமிட்டு வருவதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியிருக்கிறது. மேலும் வாடிவாசல் படம் தொடர்பான பிரீ ப்ரோடக்ஷன் பணிகளும் தொடங்கப்பட்டு நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.


