பாமகவில் நடைபெறுவது தலைமுறை யுத்தம் என்றும், இதன் காணமாக அந்த கட்சியின் பேர வலிமை குறையும் என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.


ராமதாஸ் கூட்டிய பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- பாமக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளனர். பாமகவில் நடைபெறுவது தலைமுறை மோதலாகும். மருத்துவர் ராமதாஸ் உடன் இருப்பவர்கள் ஜி.கே.மணி போன்ற மூத்தவர்கள் ஆவர். 1989ல் கட்சி தொடங்கி இன்றும் வரை தமிழ்நாடு முழுவதும் கட்சி வளரவில்லை. அன்புமணி காலத்திலும் அது வளரவில்லை. அதற்கு காரணம் பாமக ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்காக பாடுபடும் கட்சியாகும். அதை வைத்து சில தொகுதிகளில் வெற்றி பெற முடியும். 40 முதல் 50 தொகுதிகள் வரை அவர்கள் ஜெயிக்க வைக்கக்கூடிய வல்லமை உள்ளது. அதற்குள்ளாகத்தான் அவர்களும் கேட்பார்கள்.
தனி முயற்சி எடுத்து பார்த்தார்கள். அது வெற்றி பெறவில்லை. 1996 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் இல்லை என்று ஆன உடன். வாழப்பாடி ராமமூர்த்தியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அந்த தேர்தலில் 4 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்றனர். அந்த காலத்தில் அந்த கட்சிக்கு பெரிய அளவில் பிடிப்பு உள்ளது. தற்போது எவ்வளவோ காலம் மாறிவிட்டது. இந்த 30 வருடத்தில் கட்சியின் பல முன்னணியினர் வயதாகி இருப்பர். அப்படியான ஒரு சூழலில் மருத்துவர் ராமதாஸ் கட்சியின் நிறுவனர் அவரை கவுரவமான ஒரு இடத்தில் வைத்திருக்கிறார்கள். ஆனால் நேரடியாக களத்திற்கு வந்து சிறிய வயதினருடன் போட்டி போட முடியாது. அதை ராமதாஸ் உணரவில்லை.

சட்டப்படி கட்சி அன்புமணி ராமதாசிடம் உள்ளது. முலாயம் சிங் செய்த அதே தவறை தான் ராமதாஸ் செய்கிறார். முலாயம், கட்சியின் தலைமை பொறுப்பை தனது மகனுக்கு மாற்றி கொடுத்தார். ஆனால் அகிலேஷின் நடவடிக்கை பிடிக்காததால் மீண்டும் நான் தான் கட்சி தலைவர் என்று சொன்னார். ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இதன் காரணமாக உத்தரபிரதேச அரசியல் குழப்பமாக இருந்த நிலையில், முலாயம் சிங் யாதவின் மரணத்துடன் அது முடிவுக்கு வந்தது. எதற்காக இதை சொல்கிறேன் என்றால்? மூத்த தலைவரான பிறகு சில பொறுப்புணர்வு வேண்டும். பாமகவில் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக அதன் பார்கெயினிங் கெபாசிட்டி குறைந்துவிடும். ஒரு கூட்டணிக்கு செல்கிறபோது எனக்கு இவ்வளவு சீட்டுகள், இந்த இந்த சீட்டுகள் வேண்டும் என்று சொல்கிறோம். அவர்களை கொடைக்கானல், ஊட்டி என்று போட்டால் ஜெயிக்க முடியுமா? உங்களுக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி வேண்டும். தற்போது ராமதாஸ், அன்புமணி மோதல் காரணமாக பாமகவின் பேர வலிமை குறைந்துவிடும்.

தற்போது அதிமுகவில் என்ன பிரச்சினை? ஒருங்கிணைந்த அதிமுக இல்லை. ஓபிஎஸ், தினகரன் ஆங்காங்க தனித்தனியாக வேட்பாளர்களை நிறுத்தினால் வாக்குகளை பிரிப்பார்கள். அப்போது, கட்சியின் பேர வலிமையை பாதிக்கக்கூடிய வேலையில் கட்சியின் மூத்த தலைவர் இறங்கக்கூடாது. எல்லோராலும் மரியாதைக்குரியவராக வைக்கப்பட்டிருந்தவர். அவர் எப்படி மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் கூட்டத்தை கூட்டலாம். 200க்கும் மேற்பட்டவர்கள் உள்ள நிலையில் கடைசியில் 20 பேர் கூட வரவில்லை. தற்போது கலைப்பில் வரவில்லை என்று சொல்கிறார். படுத்துக் கொண்டே 50 இடங்களில் வெற்றி பெறுகிற வித்தை எனக்கு தெரியும் என்றும் ராமதாஸ் சொல்கிறார். காமராஜர் தேர்தலில் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்று சொன்னார். ஆனால் அவரது சொந்த தொகுதியான விருதுநகரில் காமராஜர் தோற்றார். அப்படி சொல்வது தவறானது. படுத்துக்கொண்டே யாராலும் வெற்றி பெற முடியாது.

எம்ஜீஆர் அப்போது புரூக்ளினில் இருந்தார். பெரிய அளவிலான அனுதாபம் இருந்து. அதுபோக ஆர்.எம். வீரப்பனின் புத்திசாலித்தனமான நடவடிக்கையாகும். எம்ஜிஆரின் 2 பாடல்களை எடுத்துக்கொண்டு அனைத்து திரைப்படங்களிலும் படத்திற்கு முன்னதாக ஒளிபரப்பினர். 1984 தேர்தலில் வீடியோ எல்லாம் பயன்படுத்தப்பட்டது. பெரிய பெரிய வேன்களில் டிவி கொண்டுவந்து வீடியோ பிளேயரை இணைத்து அதை பிரச்சாரம் செய்தார்கள். ஆனால் எம்ஜிஆர் திரும்பி வந்த உடன் என்னை எப்படி இப்படி காட்டலாம் என்று ஆர்.எம்.விக்கு அமைச்சர் பொறுப்பு வழங்காமல் இழுத்தடித்தார். எம்.ஜி.ஆர். போன்று மீண்டும் அந்த பார்முலாவை யாரும் கடைபிடிக்க முடியாது.
தற்போதைக்கு ஒரு கட்சி, பூத் கமிட்டி, பேர வலிமை மற்றும் கூட்டணி என்றுதான் பார்க்க வேண்டும். இன்றைக்கே இன்னொரு கூட்டணி வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. அது விஜய். மூன்று கூட்டணியில் இடம் இல்லை என்றால் 4வது அணி வருவதற்கும் வாய்ப்பு உள்ளது. பாமக, அதிமுக – பாஜக கூட்டணிக்கு போக வேண்டும் என்று விரும்புகிறது. ஜி.கே.மணி, போன்றவர்கள் திமுக கூட்டணிக்கு போக விரும்புவதாக தான் நான் நினைக்கிறேன். அவர் சட்டமன்றத்தில் பேசுவதை எல்லாம் பார்த்தால், அப்படிதான் யூகிக்க முடியும். அப்போது, மருத்துவர் ராமதாஸ் ஒரு தலைமுறை மோதலில் சென்று மாட்டிக் கொண்டதாகவே தெரிகிறது.

என்ன காரணம் என்றால் மூத்த தலைமுறைக்கும், தற்போது உள்ள இளைய தலைமுறை பாமக நிர்வாகிகளுக்கு இடையில் மிகப் பெரிய அளவில் இடைவெளி உள்ளது. தமிழ்நாடு அரசியல் மீண்டும் மீண்டும் பரபரப்பு ஆகி கொண்டே வருகிறது. தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் உள்ளது. பாமக சேரும். அதற்குள்ளே இவ்வளவு சிக்கல் உள்ளது. அப்போது பாமக சேர்ந்தாலும் அதனால் இவ்வளவு பெரிய பயன் இருக்குமா? என்றும் தெரியவில்லை. அப்போது, ஸ்டாலின் முயற்சி செய்துதான் 3வது, 4வது அணியை உருவாக்க வேண்டுமா? அல்லது தானே உருவாகிறதா? என்று எழுகிறது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


