spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவாடிவாசலுக்கு வழிவிட்ட 'விடுதலை 2'......மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

வாடிவாசலுக்கு வழிவிட்ட ‘விடுதலை 2’……மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் வெற்றிமாறன்.வாடிவாசலுக்கு வழிவிட்ட 'விடுதலை 2'......மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்! இவரது இயக்கத்தில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, அசுரன் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதே சமயம் இவர் சூரி, விஜய் சேதுபதி ஆகியோரின் கூட்டணியில் உருவாக்கி இருந்த விடுதலை திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. எனவே இந்த வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன், விடுதலை 2 திரைப்படத்தை இயக்கினார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவான இந்த படம் இன்று (டிசம்பர் 20) உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. 'விடுதலை 2' படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு!இளையராஜாவின் இசையில் இந்த படம் உருவாகி இருந்தது. விடுதலை முதல் பாகத்திற்கு இளையராஜாவின் இசை எப்படி பலம் தந்ததோ அதேபோல் விடுதலை இரண்டாம் பாகத்திற்கும் பலம் தந்துள்ளது. மேலும் முதல் பாகம் சூரியை சுற்றி நகர்ந்த நிலையில் இரண்டாம் பாகம் விஜய் சேதுபதியை சுற்றி நகர்ந்துள்ளது. அதன்படி விஜய் சேதுபதி தனது அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸில் நடிகர் சூரியும் தனது நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவ்வாறு விடுதலை 2 திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து தொடர்ந்து வெற்றிப் பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. வாடிவாசலுக்கு வழிவிட்ட 'விடுதலை 2'......மகிழ்ச்சியில் சூர்யா ரசிகர்கள்!இதற்கிடையில் விடுதலை 3 திரைப்படம் உருவாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில் விடுதலை இரண்டாம் பாகத்தில், விடுதலை மூன்றாம் பாகத்திற்கான தொடர்ச்சி எதுவும் காட்டப்படவில்லை. எனவே வெற்றிமாறன் அடுத்தது நிச்சயம் வாடிவாசல் திரைப்படத்தை தான் கையில் எடுப்பார் என்று நம்பப்படுகிறது. ஏற்கனவே வெற்றிமாறன் விடுதலை 2 திரைப்படத்தில் கவனம் செலுத்தியதன் காரணமாக தான் வாடிவாசல் திரைப்படம் தள்ளிப்போனது. தற்போது விடுதலை 2 திரைப்படம் வாடிவாசலுக்கு வழி விட்டிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது.

MUST READ