spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை - அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை – அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்

-

- Advertisement -

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

we-r-hiring

இவர் கோட்டூர்புரம் மண்டபம் தெரு பகுதியில் நடைபாதை பிரியாணிக் கடை நடத்தி வருவது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சம்பவத்தன்று பிரியாணி கடையில் விற்பனை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் பின்புறம் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்றதும், அங்கு தனிமையில் இருந்த காதலர்களை தனது மொபைலில் வீடியோ பதிவு செய்ததும் பின்பு அந்த பதிவை காட்டி மிரட்டி சமூக வலைத்தளங்களில் போட்டு விடுவதாக கூறி மிரட்டி பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததும் தெரியவந்தது.

தினந்தோறும் இரவு நேரங்களில் பிரியாணிக் கடை விற்பனையை முடித்துவிட்டு அண்ணா பல்கலைக்கழகத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்கு செல்வதும், அங்கு தனிமையில் இருக்கும் காதலர்களை வீடியோ பதிவு செய்து மிரட்டி பல்வேறு மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த 23ஆம் தேதி தனிநபராக சென்று மாணவியை பாலியல் வன்கொடுமை செய்திருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

டங்ஸ்டன் கனிம சுரங்க ஏலத்தை ரத்து செய்யக் கோரி – விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்த முடிவு

MUST READ