பட்டாபிராம் அருகே போலி மருத்துவமனை கண்டுபிடித்து சீல் வைத்தாா் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர்.சென்னை அடுத்த பட்டாபிராம் அணைக்கட்டு சேரி பகுதியில் MNT எனும் பெயரில் வீட்டில் வைத்து ஞானம்மாள் என்பவர் கிளினிக் நடத்தி வந்துள்ளாா். இவரது கிளினிக்கு நேற்று பட்டாபிராம் பகுதியை சேர்ந்த வெங்கட் என்பவர் தோள்பட்டை வலி காரணமாக மருத்துவம் பார்க்க சென்றுள்ளார்.அப்பொழுது ஞானம்மாள் பெயின் கில்லர் ஊசி மூலமாக செலுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் அங்கிருந்து சென்ற வெங்கட் சிறிது நேரத்தில் வேர்த்து படபடப்பு அடைந்து மயக்கமுற்று சரிந்துள்ளார். இதனால் அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி சிகிச்சை அளித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் தவறான மருந்து கொடுத்ததாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த வெங்கட்டின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சம்பந்தப்பட்ட கிளினிக்கில் இது குறித்து கேட்டுள்ளனர்.அதற்கு ஞானம்மாள் தரப்பு முறையாக பதிலளிக்காமல் அலட்சியமாக பேசியுள்ளார்.
இதனால் குடும்பத்தினர் போலி மருத்துவர் குறித்து பட்டாபிராம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் புகார் குறித்து போலி மருத்துவர் ஞானம்மாவிடம் விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து மருத்துவ கவுன்சிலுக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குநர் அம்பிகா போலி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். விசாரணை முடிவில் பிசியோதெரபி படித்துவிட்டு அலோபதி மருத்துவம் பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அந்த கிளினிக்கை மூடி சீல் வைத்தார். இதனை தொடர்ந்து மேல் நடவடிக்கைக்காக பட்டாபிராம் போலீசாருக்கு பரிந்துரை செய்துள்ளார். நீண்ட காலமாக இந்த பகுதியில் மருத்துவம் பார்த்து வந்த நிலைகள் கிளினிக் பிடிபட்டுள்ளது இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க வரியால் தமிழ்நாடு கடுமையாக பாதிப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
