spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஒரு நம்பர் லாட்டரி விற்பனை... பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது…

ஒரு நம்பர் லாட்டரி விற்பனை… பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது…

-

- Advertisement -

வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க் அருகில் ஒரு நம்பர் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த பாஜக நிர்வாகி உள்பட இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.ஒரு நம்பர் லாட்டரி விற்பனை... பாஜக நிர்வாகி உட்பட இருவர் கைது…

சென்னை வில்லிவாக்கம் தாதங் குப்பம் வாட்டர் டேங்க் அருகே சிலர் ஒரு நம்பர் லாட்டரி விற்பனை செய்வதாக ராஜமங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சென்று லாட்டரி விற்பனையில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த பாஜக மண்டல நெசவாளர் அணி துணைத் தலைவர் வெங்கடேசன்( வயது 50) வில்லிவாக்கம் பாரதி நகரை சேர்ந்த கோதண்டம் (வயது 45) ஆகிய இருவரை கைது செய்தனர்.

we-r-hiring

இவர்களிடம் இருந்து மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லாட்டரி விற்பனை ஈடுபட்ட இருவரையும் கைது செய்த போது போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக தெரிய வருகிறது. இருவர் மீதும் லாட்டரி ஒழுங்குமுறை சட்டம்  பிரிவு,  அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் மற்றும், மிரட்டல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

8 ஆண்டுகள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மோடி அரசு, விழித்தது எப்படி? – மல்லிகார்ஜுனா கார்கே விமர்சனம்

MUST READ