Homeசெய்திகள்க்ரைம்போதை மாத்திரை விற்பனை - 5 பேர் கைது

போதை மாத்திரை விற்பனை – 5 பேர் கைது

-

ஜாபர்கான் பேட்டையில் போதை மாத்திரை விற்பனை கும்பல் சிக்கியது. பேக்கரி உரிமையாளர் உட்பட 5 பேர் கைது.

போதை மாத்திரை விற்பனை - 5 பேர் கைதுஆந்திராவில் இருந்து மொத்தமாக வாங்கி வந்து தான் உபயோகித்தது போக மீதியை, நண்பர்களிடம் விற்பனை செய்து வந்துள்ளார். 60 மாத்திரைகள், 375 சிரஞ்சுகள் பறிமுதல். காதல் தோல்வியால் போதைப் பழக்கத்துக்கு அடிமையான பேக்கரி உரிமையாளர் வாக்கு மூலம்.

சென்னை எம்.ஜி.ஆர் நகர், மேற்கு ஜாபர்கான்பேட்டையில் பள்ளி ஒன்றின் அருகே போதை மாத்திரை விற்பனை நடப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் விரைந்து சென்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர் அப்போது சந்தேகப்படும் படி ஆட்டோவில் அமர்ந்து இருந்த 5பேர் கும்பலை மடக்கி பிடித்து விசாரித்தனர் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கணேசன்(37), விக்ரம்(28), விஷ்வா(21)சஞ்சய்(22) மற்றும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த கலிதீர்த்தபெருமாள்(26) என்பது தெரிந்தது மேலும் அவர்களது ஆட்டோவில் போதை மாத்திரைகள் மற்றும் சிரஞ்சுகள் பதுக்கி வைத்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

போதை மாத்திரை விற்பனை - 5 பேர் கைதுஇதையடுத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டட  5பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 375 சிரஞ்சுகள் மற்றும் 60 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர். சொந்தமாக பேக்கரி கடை நடத்தி வந்த கலிதீர்த்தபெருமாள் காதல் தோல்வியால் விரக்தி அடைந்து போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார் ஆந்திராவில் இருந்து மொத்தமாக போதை மாத்திரைகளை வாங்கி வந்து அதை கரைத்து ஊசி மூலம் தினசரி உடலில் செலுத்திக் கொள்வதுடன் நண்பர்களுடன் சேர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

MUST READ