spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்கோவையில் தொடரும் நகை கொள்ளை! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு…

கோவையில் தொடரும் நகை கொள்ளை! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு…

-

- Advertisement -

கோவை எட்டிமடை அருகே கேரளா நோக்கிச் சென்ற நகை பட்டறை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சத்தை  மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.கோவையில் தொடரும் நகை கொள்ளை! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு…

கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜெயன் (50). இவர் கோவை ஆர்.எஸ்.புரம்,  சுந்தரம் தெருவில் நகை பாலிஷ் செய்யும் கடை நடத்தி வந்தார்.  அப்போது நானா சோ ஜாதவ் என்பவரிடம் அடிக்கடி நகை வாங்கி பாலிஷ் செய்து கொடுத்ததால், நல்ல பழக்கம் ஏற்பட்டுள்ளது.  ஜெயனுக்கு தொழில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக அவர் கடையை மூடிவிட்டு, கேரளா மாநிலம்  திருச்சூரில் உள்ள சதீஷ் என்பவருக்கு சொந்தமான நகை பட்டறையில் கடந்த 2024 முதல் பணியாற்றி வருகிறார்.

we-r-hiring

இந்த நிலையில் ஏற்கெனவே பழக்கமான நானா சோ ஜாதவ் அடிக்கடி ஜெயனிடம் பணம் கொடுத்து கேரளாவில் ஏலத்திற்கு வரும் நகைகளை வாங்கிக் கொடுக்கும்படி கூறுவார். அவ்வாறே ஜெயனும் ஏலத்திற்கு வரும் நகைகளை வாங்கிக் கொடுத்து வந்துள்ளார். சனிக்கிழமையன்று வழக்கம் போல் நானா சோ ஜாதவ் ரூ.30 லட்சம் பணத்தை ஜெயனிடம் கொடுத்து அனுப்பினார். அதில் ரூ.20 லட்சம் பணத்தை தனது உடலுடன் கட்டிக்கொண்டு, அதன் மேலே சட்டையை அணிந்து கொண்டும்.  மீதமுள்ள ரூ.10 லட்சத்தை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்துக் கொண்டு கேரளா நோக்கி சென்று கொண்டிருந்தார். கோவையில் தொடரும் நகை கொள்ளை! மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு…அப்போது எட்டிமடை மேம்பாலத்தில் வந்த போது காரில் வந்த மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் மோதி உள்ளனர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை மிரட்டி உடையில் வைத்திருந்த ரூ.20 லட்சம் மற்றும் இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.10 லட்சத்தையும் கொள்ளையடித்தனர். மேலும் அவரை காரில் ஏற்றுக் கொண்டு அங்கிருந்து தப்பினர்.  பின்னர் சிறிது தூரம் காரில் அழைத்துச் சென்று அவரை இறக்கி விட்டு விட்டு மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

 

இதையடுத்து ஜெயன் கே.ஜி சாவடி காவல் நிலையத்திற்கு வந்து  சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்.  புகார் அடிப்படையில் கேஜி சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளா நகை வியாபாரியை மடக்கி 1.25 கிலோ தங்க கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதே பாணியில் நகை பட்டறை ஊழியரை தாக்கி ரூ.30 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அஜித்குமார் கொலை வழக்கு… அதிகாரிகளின் விசாரணை இன்று தொடக்கம்…

MUST READ