Homeசெய்திகள்க்ரைம்கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைது

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைது

-

கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கு- அதிமுக நிர்வாகிகள் கைது

சென்னை பட்டினம்பாக்கத்தில் கடந்த 18ஆம் தேதி பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அ.தி.மு.க., பிரமுகர் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை, புளியந்தோப்பு, நரசிங்க புரத்தை சேர்ந்தவர் ஆற்காடு சுரேஷ் (49). கொலை வழக்குகள் உட்பட 33 வழக்குகள் இவர் மீது உள்ளன. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 18ஆம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு ஆற்காடு சுரேஷ் பட்டினம்பாக்கம் சென்றார். அங்கு வைத்து ஒரு கும்பல் அவரை வெட்டிக்கொன்றது.
இந்த வழக்கில் அரக்கோணம் ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி, நெல்லை ராமையன்பட்டியை சேர்ந்த ரவுடிகள் செந்தில்குமார் முத்துக்குமார் , அரக்கோணம் மோகன் ,நவீன், போஸ், சுரேஷ் , கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரத்தை சேர்ந்த ரவுடி எட்வின் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த வழக்கில் போலீசாரால் தீவிரமாக தேடப்பட்டு வந்த ஆயிரம் விளக்கு அதிமுக 111 ஆவது வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி ஆகிய இருவரையும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இன்று போலீசார் கைது செய்தனர். இவர்களில் ஜான் கென்னடி பிரபல ரவுடியாக இருந்து, காவல்துறை உயர் அதிகாரிகள் பரிசீலனையின் பெயரில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் ரவுடி பட்டியலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஜான் கென்னடி சுரேஷை கொலை செய்ய நெல்லையிலிருந்து கூலிப்படையை வரவழைத்துள்ளார் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் அரக்கோணம் ஜெய பாலுக்கு, தற்போது கைதான அதிமுக நிர்வாகிகள் இருவரும் நெருங்கிய உறவினர்கள் என போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Image

இதனிடையே சென்னையில் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான அதிமுக நிர்வாகிகள் இருவரை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

MUST READ