spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்பாலியல் வன்கொடுமை வழக்கு- ரேவண்ணா ஆதரவாளர் கைது!

பாலியல் வன்கொடுமை வழக்கு- ரேவண்ணா ஆதரவாளர் கைது!

-

- Advertisement -

பாலியல் வழக்கு- ரேவண்ணா ஆதரவாளர் கைது!

முன்னாள் அமைச்சர் ரேவண்ணா மீதான பாலியல் வழக்கில் அவரது ஆதரவாளரை கைது செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

we-r-hiring

மக்களவைத் தேர்தலுக்கு நடுவே, கர்நாடகா மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது முக்கிய அரசியல் பிரமுகர்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டுகள். மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், கர்நாடகா மாநில முன்னாள் அமைச்சருமான ரேவண்ணா மற்றும் அவரது மகனும், மக்களவை உறுப்பினருமான ப்ரஜ்வால் ரேவண்ணா ஆகியோரது பாலியல் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தனர்.

இது கர்நாடகா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சூழலில், கர்நாடகா மாநில சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, ப்ரஜ்வால் ரேவண்ணா வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுள்ள நிலையில், இந்திய முழுவதும் உள்ள விமான நிலையங்களில் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மைசூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது தாய் கடத்தப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர், ரேவண்ணா மீது 2வது வழக்கை பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்ட பெண்ணை ரேவண்ணாவின் ஆதரவாளர் கடத்தியிருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவின் ஆதரவாளர் சதீஷை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கர்நாடகாவில் இன்னும் சில நாட்களில் மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பாலியல் விவகாரத்தால் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் ரேவண்ணா என்பதும், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மூத்த சகோதரர் என்பதும் நினைவுக்கூறத்தக்கது.

MUST READ