திருவள்ளூர்- குற்றவாளிக்கு சிறை; குற்றவாளி மனைவியுடன் உல்லாசம் – மிரட்டி டூட்டியை பார்த்த போலீஸ்
திருவள்ளூர் அருகே கைது செய்யப்பட்ட குற்றவாளியை தேடி காவல் நிலையம் வந்த மனைவியை மிரட்டி மூன்று மாதங்களாக உல்லாச வாழ்க்கையை அனுபவித்து வந்த வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலருக்கு பணி இடமாறுதல் மட்டும் வழங்கினால் போதுமா என்று குற்றவாளி தரப்பில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம்திருமழிசை அடுத்த பிராயம்பத்தை சேர்ந்த சண்முகத்தின் மகன் கார்த்திக்(31) கார் ஓட்டுநரான இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கார்த்திக் வழிப்பறியில் ஈடுபட்ட வழக்கு ஒன்றில் வெள்ளவேடு போலீசார் கைது செய்துள்ளனர். அப்போது கார்த்திக் உடன் வாழ்ந்து வந்த பெண் கார்த்திகை தேடி வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது வெள்ளவேடு காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில் பணி புரியும் தலைமை காவலர் ஏசுதாஸ் என்பவர்
அந்தப் பெண்ணிடம் உனது காதலன் கார்த்திக் விரைவில் வெளியே வரவேண்டும் என்றால் அவர் மீது மேலும் வழக்குகள் பதிவு செய்யாமல் இருக்க வேண்டும். அதற்கு நீ அட்ஜஸ்ட்மென்ட் செய்து கொண்டு என்னோடு இருக்க வேண்டும் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் கார்த்திக் சிறையில் இருக்கும் காலத்தில் தலைமை காவலர் ஏசுதாஸ், குற்றவாளி கார்த்திக் வீட்டிற்கு அடிக்கடி சென்று அவருடைய மனைவியை மிரட்டி உல்லாசமாக இருந்து அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த மூன்று மாதங்களாக சிறையிலிருந்த கார்த்திக் பிணையில் வெளியே வந்ததாக கூறப்படுகிறது. கார்த்திக் பிணையில் வெளியே வந்த பின்னரும் கார்த்திக்கு தெரியாமல் காவலர் ஏசுதாஸ் அந்த பெண்ணை மிரட்டி அனுபவித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி இரவு கார்த்திக் இல்லாத நேரத்தில் காவலர் ஏசுதாஸ் அந்த பெண்ணை மிரட்டியுள்ளார். பணிய வில்லை என்றதும் அடித்துள்ளார். இந்த கொடுமையை பொறுத்துக் கொள்ள முடியாத அந்த பெண் கண்ணீருடன் கார்த்திகிடம் கூறியுள்ளார்.
இந்தநிலையில் மீண்டும் கார்த்திக் மனைவியை தேடி வந்த காவலர்
ஏசுதாசை பார்த்து கார்த்திக் கண்டித்துள்ளார். ஆனால் காவலர் கேட்பதாக இல்லை. மீண்டும் மீண்டும் அந்த பெண்ணை தொல்லைக் கொடுத்ததால் ஒரு கட்டத்தில் கார்த்திக் காவலர் ஏசுதாஸை தாக்கியுள்ளார் .
ஒரு தலைமை காவலரை தாக்கியதை கேட்டு பொறுத்துக் கொள்ள முடியாத வெள்ளவேடு காவல் நிலையத்தை சேர்ந்த சககாவலர்கள் செப்-21 ஆம் தேதி திருமழிசையில் உள்ள கார்த்தியின் வீட்டிற்குள் அத்துமீறி காவலர்கள் இயேசுதாஸ், சரத், தாஸ் உள்ளிட்ட சுமார் 10 பேர் கொண்ட போலீசார் கார்த்திக்கை மறைவான இடத்திற்கு தூக்கி சென்று சரமாரியாக தாக்கியுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த கார்த்தியை தூக்கி வந்து பூவிருந்தவல்லி காவல்நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
என்ன நடந்தது? என்று விசாரணை எதுவும் செய்யாத பூவிருந்தவல்லி காவல்துறையினர் காவலர் ஏசுதாஸை தாக்கியதாக கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
நீதிமன்றத்தில் கார்த்திக் நீதிபதியிடம் கண்ணீருடன் நடந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார். மேலும் சில வீடியோக்களை காட்டியுள்ளார்.
கார்த்திக் மீது பரிதாபம் காட்டிய நீதிபதி பிணையில் விடுவித்துள்ளார்.
உதவிக்காக காவல்நிலையம் வந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வெள்ளவேடு காவல் நிலைய தலைமை காவலர் ஏசுதாஸை ஆவடி ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்துள்ளனர்.
ஏசுதாசுடன் கூட்டு சேர்ந்து கார்த்திகை கடத்திச் சென்று தாக்கிய 10 போலீசார்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காவல்துறை அவர்களை காப்பாற்றுவதாக கார்த்திக் புலம்புகின்றார்.
சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே உதவி கேட்டு வந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்திருப்பது காவல்துறைக்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காவலர்களை மன்னிக்கவே கூடாது.