Homeசெய்திகள்க்ரைம்பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் -  ஏர்போர்ட்டில் வாலிபரை தட்டி தூக்கிய போலீசார் !

பெண்ணுக்கு ஆபாச மிரட்டல் –  ஏர்போர்ட்டில் வாலிபரை தட்டி தூக்கிய போலீசார் !

-

- Advertisement -


இளம்பெண்ணை ஆபாசமாக புகைப்படம் எடுத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் மலேசியாவில் இருந்து வந்த அவர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 23 வயதான பெண் வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தினேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பு ரீதியாக பழகி வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் தினேஷ் அந்தப் பெண்ணை வேலூரில் உள்ள உணவகத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்பொழுதே குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அந்த பெண்ணை ஆபாசமாக செல்போனில் புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது.

மயக்கம் தெளிந்த பின் இது குறித்து அறிந்த அந்த பெண் தினேஷின் நட்பை முறித்துள்ளார். அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்திருக்கிறார். ஆனால் தினேஷ் தொடர்ந்து அந்த பெண்ணை தன்னுடன் பேசுமாறும், தன்னுடன் வெளியே வருமாறும் தொந்தரவு செய்து வந்துள்ளார். இதற்கிடையே அந்த பெண்ணுக்கு திருமணம் முடிவு செய்திருந்த நிலையில் அந்தப் பெண்ணின் பெற்றோரிடம் அவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறும் இல்லையென்றால் அந்த பெண் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு விடுவேன் என மிரட்டி வந்துள்ளார்.

இதனால் அந்தப் பெண் இந்த விவகாரம் குறித்து கடந்த மாதம் 5 ஆம் தேதி திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் தினேஷ் மலேசியாவிற்கு சென்றுள்ளது தெரிய வந்தது. அதன் காரணமாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவின் பேரில் தினேஷ் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த மாதம் 28ஆம் தேதி தினேஷ் மலேசியாவில் இருந்து கொச்சி விமான நிலையம் வந்துள்ளார். அவர் மீது லுக் அவுட் நோட்டிஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த கொச்சின் விமான நிலைய அதிகாரிகள் இது குறித்து திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை தொடர்ந்து கொச்சின் விமான நிலையம் சென்ற போலீசார் தினேஷை கைது செய்து திருச்சி அழைத்து வந்து அவரை சிறையில் அடைத்தனர்.

மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட பல்லிகள் பறிமுதல்!

MUST READ