spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவர் கைது

ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவர் கைது

-

- Advertisement -

ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவர் கைது

ஆவடி அருகே ரூ.51 லட்சம் நில மோசடி செய்த இருவரை ஆவடி போலீசார் கைது செய்தனர்.

ஆவடி கவரப்பாளையம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்(65)  பாதுகாப்பு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற விஞ்ஞானி. கடந்த 29 ம் தேதி ஆவடி மத்திய குற்றப்பிரிவில் ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்திருந்தார்.

we-r-hiring

அந்த புகாரில்,ஆவடி அடுத்த பட்டாபிராம், மாடர்ன் சிட்டி, போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தின் வாயிலாக, கடந்த 2000 ம் ஆண்டு, பூந்தமல்லி, தண்டரை கிராமத்தில், 2340 சதுர அடி நிலத்தை வாங்கினேன்.

‘தங்கலான்’ படம் தயாரித்ததை நான் பெருமையாக நினைக்கிறேன்….. ஞானவேல் ராஜா!

கடந்த சில மாதங்களுக்கு முன், மேற்படி இடத்தில் வீடு கட்ட வில்லங்க சான்று போட்டு பார்த்த போது, பரசுராமன் என்பவருக்கு, கடந்த 2023 ல், பொது அதிகாரம் கொடுக்கப்பட்டு இருந்தது.

பொது அதிகார பத்திரத்தில், சரவணன் என்பவர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளார். பின், கடந்த ஏப்.2 ம் தேதி, பரசுராமன் என்பவர் அவரது மனைவி சகுந்தலா என்பவருக்கு நிலத்தை விற்பனை செய்தது தெரிந்தது. நிலத்தின் மதிப்பு 51 லட்சம் ஆகும்.

எனவே, என் நிலத்தை போலியான ஆவணங்கள் வாயிலாக விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.

இதனை அடுத்து ஆவடி காவல் ஆணையாளர் கி சங்கர்  உத்தரவுப்படி, இந்த வழக்கினை மத்திய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் வள்ளி, தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த பட்டாபிராம், செந்தமிழ் நகரைச் சேர்ந்த சரவணன்(53) மற்றும் ஆவடி, ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த பால்ராஜ்(29)  ஆகியோரை நேற்று கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் போலி ஆவணங்கள் தயாரித்து பத்திரப்பதிவு செய்தது உறுதி செய்ததனை கண்டு அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.மேலும் தலைமறைவாக உள்ள முக்கிய ஆவண குற்றவாளியான பரசுராம் என்பவரை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

MUST READ