16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி வீடியோ எடுத்து மிரட்டிய இரண்டு பனியன் தொழிலாளர்கள் கைது.
திருப்பூர் பாண்டியன் நகர் அடுத்த செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியில் பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். 18 வயதிற்கும் குறைந்த சிறுமியை பணிக்கு சட்டவிரோதமாக வைத்திருந்த நிலையில். உடன் பணியாற்றிய வாரணாசி பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(30) என்பவர் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி காதலிப்பதாக நடித்துள்ளார்.
ஏற்கனவே திருமணமாகிய மணிகண்டன் அதனை மறைத்து சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த மணிகண்டனின் நண்பர் சிவராஜ்(30) சிறுமியை அடைய வேண்டும் என மணிகண்டனுடன் சிறுமி தனியாக இருப்பதை அறிந்து சுவிட்ச் போர்டில் பொறுத்தும் ரகசிய கேமரா மூலம் மணிகண்டன் சிறுமியுடன் தனிமையில் இருந்த வீடியோக்களை பதிவு செய்து சிறுமியை மிரட்ட துவங்கியுள்ளார்.
மேலும் சிறுமியை மிரட்டி சில்மிஷத்திலும் ஈடுபட்டுள்ளார் ஒரு கட்டத்தில் சிவராஜின் தொல்லை தாங்க முடியாத சிறுமி இது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்து அவர்கள் உதவியுடன் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த மகளிர் காவல் நிலைய போலீசார் மணிகண்டன் மற்றும் சிவராஜ் என இருவரையும் கைது செய்து சிவராஜிடமிருந்து செல்போன், ரகசிய கேமரா உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி திருப்பூர் மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இவர்கள் வேறு பெண்களிடமும் இதே போல சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனரா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனியார் மருத்துவமனையில் 52 லட்சம் ரூபாய் கையாடல் செய்த இளம் பெண் கைது