Homeசெய்திகள்மாவட்டம்ஊட்டி தொகுதியில் வெற்றி பெற்ற போஜராஜனுக்கு பாஜக உற்சாக வரவேற்பு…

ஊட்டி தொகுதியில் வெற்றி பெற்ற போஜராஜனுக்கு பாஜக உற்சாக வரவேற்பு…

-

- Advertisement -

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போஜராஜன் (M. Bhojarajan) அவர்களுக்கு, அக்கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்து அளிக்கப்பட்டது.ஊட்டி தொகுதியில் வெற்றி பெற்ற போஜராஜனுக்கு பாஜக உற்சாக வரவேற்பு…

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, 27 தொகுதிகளில் களம் கண்ட நிலையில், ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அந்த வெற்றியை பெற்ற ஊட்டி சட்டமன்ற உறுப்பினர் போஜராஜன்க்கு பாஜக சார்பில் சென்னை கமலாலயத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை தியாகராயர் நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வந்த போஜராஜனை, கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆரவாரத்துடன் வரவேற்றனர். அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதுடன், இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடினர்.

we-r-hiring

மேலும், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், போஜராஜனுக்கு பூங்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தார். தேர்தலில் கட்சிக்காக உழைத்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்ததுடன், இந்த வெற்றி பாஜக தொண்டர்களுக்கு புதிய உற்சாகத்தை அளிக்கும் என்றும் கூறினார். இந்த நிகழ்வில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வெற்றியை கொண்டாடினர்.

+2 பொதுத்தேர்வில் ஈரோடு மாவட்டம் முதலிடம் – பட்டாசு வெடித்து கொண்டாடிய கல்வித்துறை

MUST READ