Homeசெய்திகள்மாவட்டம்நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் – அம்பத்தூரில் பரபரப்பு…

நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் – அம்பத்தூரில் பரபரப்பு…

-

- Advertisement -

சென்னை அம்பத்தூரில் டாஸ்மாக் பணியாளர்களுக்கு நிரந்தர வேலை வழங்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் – அம்பத்தூரில் பரபரப்பு…தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சங்கத்தின் சிறப்பு தலைவர் பாரதி தலைமை தாங்கினார். இதில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சங்கத்தின் சிறப்பு தலைவர் பாரதி, ஆட்சி அமைக்கும் முன்பு ஒப்பந்த அடிப்படையில் ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய ஊழியர்களுக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும், ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் வாக்குறுதி அளித்ததாக தெரிவித்தார்.

we-r-hiring

நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் – அம்பத்தூரில் பரபரப்பு…

தற்போது ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், அந்த வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், டாஸ்மாக் பணியாளர்கள் தற்போது குறைந்தபட்ச ஊதியத்தில் பணியாற்றி வருவதால், அவர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

அதேபோல், தமிழ்நாட்டில் மூடப்பட்டுள்ள 717 டாஸ்மாக் கடைகளுடன் மீதமுள்ள கடைகளையும் படிப்படியாக மூடி, அங்கு பணியாற்றும் ஊழியர்களுக்கு அரசு துறைகளில் மாற்றுப் பணி வழங்க வேண்டும் என்றும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

”பறவைகளின் சொர்க்கம்” ஊட்டி ரோஜா பூங்காவில் கண்கவர் அலங்காரம்…

MUST READ