spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்மாவட்டம்நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

-

- Advertisement -

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை நகராட்சியில் 27 வார்டுகள் உள்ளன. இந்த பகுதிகளில் உள்ள இடங்களில் தூய்மை பணியை மேற்கொள்ள 176 தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

we-r-hiring

இதில் 69 பேர் நிரந்தர பணியாளர்களாகவும், 107 பேர் ஒப்பந்த பணியாளர்களாகவும் பணிபுரிகின்றனர். இந்நிலையில் தற்போது நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்தும், திடீரென 15 ஒப்பந்த பணியாளர்களை பணிநீக்கம் செய்ததைக் கண்டித்தும், பணிச்சுமை அதிகரிப்பதைக் கண்டித்தும், ஒப்பந்த பணியாளர்களிடம் குப்பையை எடை போட்டு அதற்கு ஏற்ற சம்பளம் நிர்ணயிக்கும் முறையை கைவிட வேண்டும் என்றும் நகராட்சி சட்டப்படி ஒப்பந்த பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பணியாளர்கள் பேருந்து நிலையம் மற்றும் விராலிமலை ரோடு ஆகிய பகுதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

நகராட்சி நிர்வாகம் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து போராட்டம் 

இந்த போரடத்தில் பல கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி பகுதியில் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டது. பின்னர் நகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி மீண்டும் பணி வழங்கியதை அடுத்து போராட்டத்தை கைவிட்ட தூய்மை பணியாளர்கள் மீண்டும் தங்களது பணிக்கு சென்றனர். 

MUST READ