வண்ணார்பேட்டை செல்லப்பாண்டியன் மேம்பாலத்தின் இறக்கத்தில் சாலையில் காணப்படும் வெடிப்புகள் காரணமாக வாகன ஓட்டிகள் ஆபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம், வண்ணார்பேட்டை பகுதியில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க செல்லபாண்டியன் மேம்பாலம் அமைக்கப்பட்டது. வடக்கு, தெற்காக நெல்லையில் இருந்து மதுரை மார்க்கமாக செல்லும் வாகனங்கள் இப்பாலத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செல்லபாண்டியன் மேம்பாலத்தில் இருந்து வடக்கு பைபாஸ் சாலை தொடங்கும் பகுதியில், அதிகளவில் வெடிப்புகள் காணப்படுகிறது.
மேம்பாலத்தில் இருந்து இறங்கி, வடக்கு பைபாஸ் சாலையை நோக்கி வாகனங்கள் செல்லும்போது, பாலத்தில் வெடிப்புகள் பாளம், பாளமாக காட்சியளிக்கின்றன. பாலத்தில் வேகமாக இறங்கும் இருசக்கர வாகனங்கள், இந்த வெடிப்புகளில் சிக்கி சரிய வாய்ப்புள்ளது. இந்த பள்ளங்களில் ஏறி இறங்கும் டயர்கள் வாகனங்களை தட்டுத்தடுமாறி செல்ல வைக்கின்றன. வடக்கு பைபாசின் ஆரம்பம் முதலே இடநெருக்கடி காணப்படும் நிலையில், சாலைகளில் உள்ள வெடிப்புகளை சரி செய்ய நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோாிக்கை விடுத்துள்ளனா்.
காதலர் தினத்திற்கு எதிர்ப்பு…ஆட்டுக்கும் நாய்க்கும் திருமணம்!!



