spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்ஆவடியில் எச்.வி.எப்  பணியாளர்கள் போராட்டம்

ஆவடியில் எச்.வி.எப்  பணியாளர்கள் போராட்டம்

-

- Advertisement -

ஆவடியில் எச்.வி.எப்  பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை கண்டித்து போராட்டம் நடத்தினர்.

ஆவடியில் இயங்கி வரும் மத்திய அரசின் நிறுவனமான எச். வி. எப்., தொழிற்சாலையில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு நடப்பதை கண்டித்து தொழிலாளர்கள் சங்க வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆவடியில் எச்.வி.எப்  பணியாளர்கள் போராட்டம்

we-r-hiring

கூட்டுறவு சங்கத்தின் பொதுக் குழுவை கூட்ட வேண்டும் மற்றும் கூட்டுறவு சங்கத்தின் துணை விதியை தமிழில் மொழி பெயர்ப்பு என்பதை வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர்.

இதில், அதிகப்படியாக பிடிக்கப்பட்ட குடும்ப நலநிதி  மற்றும் இரண்டு சதவீதம் வட்டி மொத்தம் உடனே திருப்பி வழங்க வேண்டும்,  கூட்டுறவு சங்க சட்டம் 1983 பிரிவு 32-ன்படி நிதி ஆண்டு முடிந்து ஆறு மாதத்தில் பொதுக்குழு நடத்த வேண்டும்,  கூட்டுறவு சங்கத்தின் துணைவிதியை தமிழில் மொழி பெயர்த்து வழங்க வேண்டும், கடந்த நான்கு ஆண்டுகளில் காப்பீடு போக அதிகப்படியான தொகை ரூபாய் 44 லட்சம் கட்டிய 42 பேரின் தொகை என்ன ஆனது? இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் மற்றும் எச்விஎஃப் கூட்டுறவு சங்கத்தின் பொதுக்குழு தீர்மானங்களை அனைத்து தொழிலாளர்களும் தெரிந்து கொள்ளும் வகையில் தொழிலகத்தில் நோட்டீஸ் ஒட்டிட வேண்டும்  என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

MUST READ